அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை மேலும் ஒரு, சமூக ஊடகம், வெளியேற்றியிருக்கிறது.
ஸ்நாப் சாட் (snapchat ) என்ற சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதற்கே, டொனால்ட் ட்ரம்ப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் மீதான இந்த தடை நிரந்தரமானது என்றும், ஸ்நாப் சாட் (snapchat ) நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடம் மீது, ட்ரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், பின்னரும், அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்ட காணொளிகள், கருத்துக்களை அடுத்து, பல்வேறு சமூக ஊடகங்களும் அவரை வெளியேற்றியுள்ளன.
வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக கூறி ருவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற பிரபலமான சமூக ஊடகங்களில் ட்ரம்ப் வைத்திருந்த கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே, மற்றொரு சமூக ஊடகமான ஸ்நாப் சாட் (snapchat ) நிறுவனமும் ட்ரம்ப்புக்கு தடைவிதித்துள்ளது.