நிதி அமைச்சர் கிறிஸ்டியா பிறீலாண்ட் (Chrystia Freeland ) புதிய நிதித்திட்டங்களை தவிர்க்க வேண்டுமென பிரதமரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிதி நிலைமைகளின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை பிரதமர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பொருளாதார மீட்சித்திட்டங்கள், உள்நாட்டு உற்பத்தி, முதலீட்டுத்திட்டங்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதோடு அது தொடர்பான மேம்படுத்தப்பட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும், செயற்றிட்டங்களையும் கண்டறியுமாறும் அவரிடத்தில் கோரப்பட்டுள்ளது.