கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ புதுப்பிக்கப்பட்ட ஆணைக் கடிதங்களை தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார்.
அமைச்சரவையில் இந்த கடிதங்களை சமர்ப்பித்திருந்தவர், பின்னர் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதனை அனுப்பி வைத்துள்ளார்.
இந்தக்கடிதத்தில் கொரோனா தொற்றின் பின்னரான நிலைமைகள் மற்றும் முதன்மைத்தானமாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பில் விபரிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக,பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்தல் செயற்பாட்டை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.