தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவினால் காலமானார்.
71 வயதுடைய, ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த நவம்பர் 11ம் நாள், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவர் இன்று மரணமானார் என்று கூறப்படுகிறது.
2001 முதல் 2013ம் ஆண்டு வரை இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராகவும், 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை, தமிழக காங்கிரஸ் தலைவராகவும் ஞானதேசிகன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.