தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று, அந்தக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா விவகாரம் தொடர்பாக பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக முடிவெடுத்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பாக இரா.சம்பந்தனுக்கு, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்துள்ளார் என்று இரண்டு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தனர்.
இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும், அவ்வாறான கடிதம் எதையும், கூட்டமைப்பின் தலைவருக்கு தான் எழுதவில்லை என்றும், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.