ஒன்ராரியோவில் வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கியிருக்கும் உத்தரவு அமுலாக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினரின் எல்லைகள் தொடர்பில் கேள்விகள் எழுப்பபட்டு வருகின்றது.
சாதாரண பொதுமகனை எப்போது காவல்துறையினர் நிறுத்த துடியும், அவர்களிடத்தில் விசாரணைகளை தொடுக்க முடியும், வீடுகளுக்குள் நுழைய முடியுமா என்பது தொடர்பில் கேள்விகள் எழுப்பபட்டுள்ளன.
சமூக ஊடகங்கள் வாயிலாக ஒன்ராரியோ மாகாண அரசாங்கத்தினை நோக்கி இந்த வினாக்கள் தொடர்ச்சியாக எழுப்பபட்டு வருகிறது.
இதேவேளை, வீட்டுக்குள் பொதுமக்களை முடக்கும் செயற்றிட்டத்தில் போதியளவு தெளிவின்மை தொடாவதாகவும் விமர்சனங்கள் தொடர்சியாக மனித உரிமை ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.