சீன இராணுவத்துடன் நேரடித் தொடர்பில் இருக்கும், 9 நிறுவனங்களை அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
சீன இராணுவத்துக்கு சொந்தமான அல்லது சீன இராணுவம் கட்டுப்படுத்தும் சீன நிறுவனங்களில், அமெரிக்கா முதலீடு செய்யக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில், சீனாவின் அலைபேசி தயாரிப்பு நிறுவனமான ஜியோமி (Xiaomi) , விமான தயாரிப்பு நிறுவனமான கோமக் (Comac) உள்ளிட்ட 9 நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்த 9 நிறுவனங்களிலும் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலீடு செய்திருந்த அமெரிக்கர்கள் வரும் நவம்பர் 11ம் திகதிக்குள் பங்குகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.