அரசாங்க பிரதிநிதிகள் எவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளாதது ஏன் என்று, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளன.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி, “ பிற நாடுகளில் அரசின் சார்பில் பிரதமர்களும், சுகாதார அமைச்சர்களும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும்போது இந்தியாவில் மட்டும் அரசுப் பிரதிநிதிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் தவிர்க்கின்றனர். ” என்று குற்றம்சாட்டியுள்ளார்.