பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று, தகவல்கள் கூறுகின்றன.
சில நாட்களுக்கு முன்னதாக, உயர் மட்ட அதிகாரிகள் குழுவுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
எனினும், இந்தப் பயணத் திட்டம் சில வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானி முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அதற்குப் பின்னர் முதல் முறையாக பாகிஸ்தான் பிரதமர் சிறிலங்கா வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.