உகண்டாவில் ஜனாதிபதி தேர்தலில், யொவேரி முசெவேனி (Yoweri Museveni) ஆறாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
18 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட உகண்டாவில் கடந்த 14ஆம் திகதி நடந்த தேர்தலில், 57 வீதமான மக்கள் வாக்களித்திருந்தனர்.
இதில் 59 வீதமான வாக்குகளைப் பெற்று தற்போதைய ஜனாதிபதி யொவேரி முசெவேனி (Yoweri Museveni) வெற்றி பெற்றுள்ளார் என்றும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, பொபி வைன் (Bobi Wine) 35 வீத வாக்குகளைப் பெற்றதாகவும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
1986ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியில் இருந்து வரும், யொவேரி முசெவேனி (Yoweri Museveni) மோசடியான முறையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்று பொபி வைன் (Bobi Wine) குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் நாளில் இருந்து உகண்டாவில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
மீண்டும் இணையச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து, அம்பலப்படுத்தப் போவதாக, 38 வயதுடைய முன்னாள் பொப் பாடகரான, பொபி வைன் (Bobi Wine) கூறியுள்ளார்.