பைசர் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி எதிர்பார்க்கப்பட்ட அளவை விடக் குறைவாகவே கிடைத்துள்ளதாக ஐரோப்பிய நாடுகள் பல குற்றம்சாட்டியுள்ளன.
அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தடுப்பு மருந்துகளின் விநியோகத்தைக் குறைத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த சுவீடன், டென்மார்க், பின்லாந்து, லிதுவேனியா, லத்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்த தாமதம், ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தடுப்பூசி செயல்முறையின் நம்பகத்தன்மையை குறைக்கிறது என்றும் இந்த நாடுகள் எச்சரித்துள்ளன.
எனினும், தடுப்பு மருந்து விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒரு தற்காலிக பிரச்சினை தான் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உற்பத்தியை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயல்முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் தடுப்பு மருந்து விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.