ஒன்ராரியோவில் 3ஆயிரத்து 56புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் 51 மரணங்களும் சம்பவித்துள்ளதாக பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கியூபெக்கில் 2ஆயிரத்து 225 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதோடு 67மரணங்களும் சம்பவித்துள்ளன.
அதேநேரம் ஆல்பேர்ட்டாவில் 171 தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதோடு 15 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
மனிடோபாவில்180 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதோடு 2 மரணங்களும் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.