ஒன்ராரியோவை மீளத்திறக்கும் அவசரகால உத்தரவுகள் அனைத்தும் ஒன்ராரியோ மீள் திறப்புச் சட்டத்தின் கீழ் மேலதிகமாக 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 20ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரும் மீள் திறப்புச் சட்டத்தின் கீழான உத்தரவுகள் அனைத்தும் பெப்ரவரி 19ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் பாதுகாப்பையும், பொதுமக்களின் எதிர்காலத்தினையும் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்ராரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஒன்ராரியோ மீள் திறப்புச் சட்டம் நீடிக்கப்படுவதனால் ஒன்ராரியர்களின் பாதுகாப்பு மேலும் உறுதியாகின்றது என்று சொலிசிட்டர் ஜெனரல் சில்வியா ஜோன்ஸ் (Sylvia Jones) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.