கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் கியூபா இடையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நட்பு மலர்ந்தது.
எனினும் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவி ஏற்றது முதல் அவர் கியூபாவுடன் விரோத போக்கை கையாண்டு வருந்தார்.
இந்நிலையில் அவரது பதவிக் காலம் 20ஆம் திகதி முடிவுக்கு வரவுள்ள நிலையில் கியூபாவுக்கு எதிராக அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
முன்னதாக கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடாக கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது