சிறிலங்காவில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 309ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 487 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதன்படி, இதுவரையில் பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தொற்று உறுதியானவர்களில் ஏழாயிரத்து 308 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு, இலங்கையில் இதுவரை 255 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.