தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்று, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இடம்பெற்றது,
தமிழகத்தில் கோவின் செயலியில் ஒரே நேரத்தில் அதிகளவானோர் தடுப்பூசி போட முன்பதிவு செய்ய முயன்றதால் சிறிது நேரம் செயலி முடங்கியதாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருவரும், கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒருவரும் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை சுமார் 3, ஆயிரம் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.