ஆப்கானிஸ்தானின் காபூலில் துப்பாக்கி ஏந்தியவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயர் நீதிமன்றின் இரு பெண் நீதிபதிகள் உயிரிழந்துள்ளனர்.
இரு நீதிபதிகளும் இன்று காலை நீதிமன்ற வாகனத்தில் தங்கள் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளதாக நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் அஹ்மத் பாஹிம் கவீம் தெரிவித்தார்.
துரதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலின் விளைவாக இரு பெண் நீதிபதிகளை இழந்து விட்டோம் என்று குறிப்பிட்ட பாஹிம் கவீம், சம்பவத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளதாகவும் கூறினார்.
நாட்டின் உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் 200 க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகளில் அவர்கள் இருவரும் அடங்குவதாக நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டினார்.