ஒன்ராரியோவில் வீட்டுக்குள் முடக்கும் உத்தரவுக்கு எதிரான மனநிலை உடையவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் ஆகியோர் நிலைமைகளை புரிந்து ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பகிரங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுச்சுகாதார அதிகாரிகளால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவுக் கால கட்டத்தில் பேராட்டங்களை கைவிடுமாறும் கோரப்பட்டுள்ளது.
அதேநேரம், சமூக ஊடகங்கள் ஊடாக விடுக்கப்படும் முடக்கல்களுக்குஎதிரான கருத்துருவாக்கங்களை கைவிடுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.