வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 416 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதில், யாழ். மாவட்டத்தில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஐவர் கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் உள்ளவர்கள் எனவும் ஏனைய இருவரும் ஜம்புகோளப்பட்டினம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா, பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் ஒருபகுதி முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், வவுனியா மற்றும் குருமன்காடு பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது