அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்புக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது.
இந்நிலையில் தலைநகர் வொஷிங்டனில் ஏராளமான ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விசேட ரோந்துகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) ஆதரவாளர்களால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து வொஷிங்டன் முழுவதும் காவல்துறையின் அதிகாரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.