இந்தியாவின் 51 ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவா மாநிலம் பனாஜியில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவா மாநில முதல்வர் பிரமோத் சவாந்த் ஆகியோர், இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
திரைப்பட நடிகர் சுதீப் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக இந்த திரைப்பட விழாவில், விருந்தினர்கள், நேரடியாகவும், மெய்நிகர் முறையிலும், பங்கேற்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த நொவம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட இந்த விழா எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடரவுள்ளது.
இந்த திரைப்பட விழாவில் 224 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.