ஈரானுடனான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் வெடிகுண்டு விமானம் மத்திய கிழக்கில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
ஈரானிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வட இந்தியப் பெருங்கடலில் ஒரு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் நிறுத்தத்திலிருந்து 100 மைல்கள் தொலைவில் தரையிறங்கியதாகக் கூறப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் இந்த ரோந்து பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்த நிலையில், அமெரிக்க விமானப்படை இப்பகுதியில் இதேபோன்ற பயணங்களை மேற்கொண்டது சமீபத்திய மாதங்களில் ஐந்தாவது முறையாகும்