புதிய ஜனாதிபதி ஜோ பைடனின் நிருவாகத்தின் கீழ் அமெரிக்க, கனடா இடையே இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும் என்று அமெரிக்காவுக்கான கனடிய தூதுவர் கிர்ஸ்டன் ஹில்மேன் (Kirsten Hillman) தெரிவித்துள்ளர்.
கனடிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபன தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்து வரவுள்ள சவால் மிக்க பொருளாதார மீட்பு மற்றும் காலநிலை பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுச் செயற்பாடுகளும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் பாரம்பரிய உறவுகளையும் மீளக் கட்டியெழுப்புவதற்கான எதிர்பார்ப்புக்களும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.