டிசம்பர் மாதம் தென்மேற்கு நோவா ஸ்கொட்டியாவில் உள்ள டெலாப்ஸ் கோவ் கடற்கரையில் காணாமல் போன மீன்பிடி கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
படகில் இருந்த 6 பணியாளர்களில் ஐந்து பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அக்கப்பலின் தலைமை அதிகாரியான வில்லியம் சவுலிஸ், நெறிப்படுத்தலில் யர்மவுத்திலிருந்து வெளியேறிய, ஒரு வாரம் நீடித்த மீன்பிடி பயணத்திற்காகப் புறப்பட்டிருந்தது
டிசம்பர் 15 அதிகாலையின் பின்னர் இந்தக் கப்பலின் தொடர்புகள் ஏதுவும் கிடைத்திருக்கவில்லை.
இந்நிலையில் கனடிய கடலோர காவல்படை மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு உறுப்பினர்கள் உதவியுடன் நோவா ஸ்கோடியா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பகுதிகளில் தோடுதல் நடைபெற்றது.
இதன்போது டெலாப்ஸ் கோவ் கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் 60 மீட்டர் ஆழத்தில் அக்கப்பல் கண்டறியப்பட்டுள்ளது.