சிறிலங்கா வான்படையிடம் உள்ள ராடர் கருவிகளுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை இந்தியா கொடையாக வழங்கியுள்ளது.
200 மில்லியன் ரூபா பெறுமதியான 341 உதிரிப்பாகங்களை ஏற்றிய இந்திய வான்படையின் ஏஎன்-32 வானூர்தி, கடந்த 10ஆம் நாள், கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை சென்றடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரக தகவல் ஒன்று கூறுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, இந்தியாவினால் இந்திரா எம்.கே II வகையைச் சேர்ந்த நான்கு ராடர்கள், சிறிலங்கா விமானப்படைக்கு கொடையாக வழங்கப்பட்டிருந்தன
தாழ்வாக பறக்கும் வானூர்திகளை அடையாளம் காணக் கூடிய இந்த ராடர் கருவிகளைப் பராமரித்து, அவற்றுக்குத் தேவையான உதிரிப்பாகங்களை இந்தியா கொடையாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.