அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முக்கிய நிர்வாக பணிக்குழுவில் 20 அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான அரசு, வரும் 20ம் திகதி ஆட்சி அமைக்க உள்ளது.
அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் முதல் பெண் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவி ஏற்றவுடன் அவர்களின் அரசின் நிர்வாக பணியை கவனிப்பதற்கான நபர்களை நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது..
இந்த நிர்வாக பணிக்குழுவில் 13 பெண்கள் உட்பட சுமார் 20 அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.





