ரஜினி மக்கள் மன்றத்தின் 4 மாவட்டச் செயலாளர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று இந்த இணைப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சீனிவாசன் ஆகிய நான்கு பேரே திமுகவில் சேர்ந்துள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகி ஜோசப் ஸ்டாலின், ரஜினிக்காக தனது பெயரில் தொடங்கப்பட்ட மக்கள் சேவை கட்சிக்கும் திமுகவில் தாம் இணைவதற்கும் சம்பந்தம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் சேவை கட்சியை திமுகவில் இணைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.