கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குறித்து மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு பல்வேறு நாடுகள் இந்திய அரசை அணுகியுள்ளன. அண்டை நாடுகளுக்கு முதலில் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யதிட்டமிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தடுப்பூசி ஏற்றுமதி குறித்து மத்திய சுகாதாரம், வா்த்தகம், வெளியுறவு அமைச்சகங்களின் அதிகாரிகள், மருந்து தயாரிப்பு துறை பிரதநிதிகள் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் உள்நாட்டில் தடுப்பூசி தேவை, உற்பத்தித் திறன் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாகவும் தடுப்பூசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து முடிவு எடுக்க சில காலமாகும் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





