ஒன்ராரியோவில் அதிதீவிர சிகிச்சை பிரிவுகளை உள்ளடக்கிய புதிய மருத்துவமனையொன்று திறக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும்காலப்பகுதியில் கொரோனா தீவிரமடைந்து நெருக்கடியான நிலைமைகள் ஏற்படுகின்றபோது இந்த மருத்துவமனையையும் பயன்படுத்துவதே திட்டமாக உள்ளது.
தற்போதுள்ள வைத்தியசாலைகளின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவுகளில் மேலதிக தொற்றாளர்கள் அனுமதிக்க முடியாத நிலைமைகள் மெதுவாக ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே இந்த மருத்துவ மனை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.