ஆறு வருடங்கள் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போராட்டமொன்றை யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுத்தனர்.
யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டமானது, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்றது.
இந்த போராட்டத்தின்போது, ஆசிரியர் இடமாற்ற கொள்கையை வலியுறுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தி, ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
அதேநேரம், வட.மாகாண ஆளுநர், வட.மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை ஆசிரியர் சேவை சங்க தலைவர் உட்பட மத்திய கல்வி அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் கையளித்துள்ளனர்.