கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இருவர் மரணம் அடைந்துள்ளதாக, இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த 52 ஒருவர் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் நேற்று மாலை மரணமடைந்துள்ளார்.
மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்ததில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விளைவுகளால் மரணம் அடையவில்லை எனத் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த, 43 வயதுடைய ஒருவர், நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், இன்று மரணமடைந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றும், சுகாதார அமைச்சு கூறியுள்ளது.