சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த போது கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க வானூர்தி நிலையம் வழியாக இன்று காலை இந்திய மீனவர்கள், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீனவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறிலங்கா கடற்படையினரால், படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தடுப்புக்காவலில் இருந்த இவர்கள் பின்னர், மீரிஹானவில் உள்ள தடுப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
படகுகள் நீதிமன்ற உத்தரவின் பேரின் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்தியன் எயர்லைன்ஸ் வானூர்தி மூலம், சென்னை வானூர்தி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.