சூடானின் மசாலிற் (Massalit) என்ற பழங்குடியின குழுவினருக்கும் அராப் (Arab ) பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூடானின் மேற்கு பகுதியில் உள்ள டார்பூர் (Darfur) மாகாணத்தின் தலைநகரில் இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
தனி நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு குழு மோதலாக வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டதுடன், வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
2 நாட்களாக நடந்த இந்த மோதலில் 83 பேர் உயிரிழந்த அதேவேளை, அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்ட 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.