அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் பாரிய குழாய் விரிவாக்க திட்டத்தினை நிறுத்துப்போவதாக அறிவித்துள்ளமையை வரவேற்பதாக என்.டி.பி. மற்றும் பசுமைக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
என்.டி.பி. கட்சியின் ஜக்மீத் சிங் (Jagmeet Singh) தெரிவிக்கையில், நீண்டகாலமாக இறுபறிக்குள்ளாகியிருக்கும் இந்த திட்டத்தின் விளைவுகளை உணர்ந்து தீர்க்கமான முடிவொன்றை எடுத்துள்ளமை சிறப்பானதாகும். இதனை எமது கட்சி வரவேற்கின்றது. அத்துடன் இந்த அறிவிப்பு விரைவில் செயல் வடிவமாக வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை, பசுமைக்கட்சியின் தலைவர் அன்னமி போல், (Annamie Paul) பைடனின் முதலாவது கனடா பற்றி அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது. நாங்கள் அவருடைய உத்தியோக பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்திருக்கின்றோம் என்று கூறியுள்ளார்.