பருத்தித்துறையில் நேற்று இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்திலிருந்து வந்த இருவர், பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போதே, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்று யாழ்.போதனா மருத்துவமனை மற்றும் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 744 பேருக்கு கொரானா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், வடமாகாணத்தில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேருக்கும், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கும், யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்குமே நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார்.