நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நுவரெலியா- கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவியது.
பார்க் தோட்ட முகாமையாளர் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் பேசிய சம்பவத்தை அடுத்தே, நேற்றிரவு 7 மணி முதல் இந்த அமைதியின்மை ஏற்பட்டது.
தோட்ட முகாமையாளரின் வீட்டை முற்றுகையிட்டுள்ள பொதுமக்கள், முகாமையாளர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், பார்க் தோட்டத்தின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், கொங்கொடியா தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் இவ்வாறு பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.