அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலெனியா ட்ரம்ப் தனது கடைசியுரையில் மக்களிடம் பிரியாவிடை பெறும் வகையில் உரையாற்றியுள்ளார்.
அதில், “நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஆர்வமாக இருங்கள், ஆனால் வன்முறை ஒருபோதும் பதில் அல்ல, வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்ததோடு, “தாதியர்கள், மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள் ,பலரைக் காப்பாற்ற உழைக்கும் அத்தனை பேருக்கும் நன்றி எனவும் தெரிவித்தார்.
பெற்றோர் குழந்தைகளைப் படிக்க வைக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், அமெரிக்காவின் சுதந்திரமும் வீரமும் மிக்க வீரர்களின் வரலாற்றை போதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
ஒரே குடும்பத்தைப் போல நாம் எதிர்கால தலைமுறைக்காக போராடுவோம் என்றும் மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.