கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக அமெரிக்க அரசு பெரும்பாலான நாடுகளுக்கிடையிலான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி மற்றும் மே மாதம் 24 ஆம் திகதிகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெரும்பாலான நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்திற்கு தடைவிதித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரேஸில் நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்திற்கு அமெரிக்க ட்ரம்ப் அனுமதி அளித்துள்ளார்.
எனினும் சீனா, ஈரான் போன்ற நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்திற்கு தடை நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.