அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைகளை போடுதல் வேண்டும் என்றும் என்று கியூபெக் முதல்வர் பிரான்சுவா லெகால்ட் (François Legault) வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தினை நேரடியாகவே பிரதமர் ஜஸ்டின் ரூடோவிடத்தில் முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விமான நிலையங்களில் விமானங்கள் ஒவ்வொருநாளும் தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளன என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய உருமாறிய கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் விமான நிலையங்களில் காணப்படுகின்ற நெகிழ்வுத்தன்மையானது ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.