அமெரிக்காவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது எளிதான காரியமல்ல என்று நாளை துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள, கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
‘நாளை நாங்கள் பதவி ஏற்க செல்ல உள்ளோம். அந்த பணிகளை செய்ய தயாராக இருக்கிறோம்.
அமெரிக்காவை சீரமைப்பதற்கு நிறைய பணிகள் இருக்கிறது. அது எளிதாக இருக்க போவதில்லை.
கொரோனா தடுப்பூசி செலுத்துவது, மீண்டு வருவது, வேலை செய்யும் மக்கள், அவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம், போன்ற நிறைய பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.