சசிகலா சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தாலும், அதிமுகவில் அவரை இணைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதே, முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது.
சசிகலா விடுதலையாகி, வெளியே வந்தாலும், அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு, 100 சதவீதம் வாய்ப்பே இல்லை.
ஜெயலலிதா இருக்கும் போது, சசிகலா அதிமுகவிலேயே இருக்கவில்லை.
சசிகலாவுடன் இருந்த பெரும்பாலோனார் அதிமுகவுக்கு வந்து விட்டனர். சிலர்தான் அவருடன் உள்ளனர்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வரும் 27ஆம் திகதி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.





