தமிழக மீனவர்களின் படகுகளை சிறிலங்கா கடற்படை மூழ்கடித்துள்ளது என ம.தி.மு.க. பொதுசெயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய மீனவர்களின் நிலை என்ன என்பதை இந்திய அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் மீது கொலைவெறிக் கோபம் காட்டுகின்ற இந்தியா, தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கின்ற சிறிலங்காவின் சிங்கள இனவெறி அரசை அரவணைத்து முதுகில் தட்டிக் கொடுக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.