ஜப்பானின் வடக்குப் பகுதியில் பாரிய பனிப்புயல் தாக்கியதில், அதிவேக நெடுஞ்சாலையில் 130 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகலளவில் இந்த பனிப்புயல் தாக்கியதாகவும், இதனால், அங்கு 200இற்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கிய வாகனங்களில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
100 கிலோமீற்றர் வேகத்தில் பனிப் புயல் தாக்கியதாக வானிலை நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.