கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக அமைச்சர் காமராஜ் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கடந்த 6ம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
அமைச்சரின் உடல் நிலை மோசமடைந்துள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில், எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இணை நோய்கள் காரணமாக, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





