தமிழ்நாடு, திருச்சி பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
வழமையாக பொங்கல் பண்டிகையின் மாட்டுப் பொங்கல் நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகின்ற நிலையில், தொடர்மழை காரணமாக பிற்போடப்பட்ட பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் என்.விஸ்வநாதன் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்ததுடன் அ.தி.மு.க.வின் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார்.
இந்த, ஜல்லிக்கட்டில் 500இற்கும் அதிகமான காளைகள் களமிறக்கப்படுவதுடன் நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன், அதிகளவிலான பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் ஜல்லிக்கட்டைக் கண்டுகளித்து வருகின்றனர்.