பாரிய குழாய் விரிவாக்கத் திட்டம் தொடர்பில் கனடிய அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை பைடன் நிருவாகத்திற்கு எடுத்துரைக்கவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
பதவி ஏற்றதன் பின்னர் இந்த குழாய் விரிவாக்கத் திட்டத்தினை இரத்துச் செய்வதற்கான சமிக்ஞைகளை பைடன் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் கருத்து வெளியிட்ட ரூடோ, கனடா, அமெரிக்க எல்லைகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் தொடர்பில் நிலைப்பாடுகள் பல உள்ளன. அவை தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுத்தே தீர்மானிக்கப்பட வேண்டும்.
பைடன் பதவியேற்றதன் பின்னர் நாம் அதுபற்றி ஆறுதலாக பேச்சுக்களை நடத்தி சுமூகமான தீர்வினைப் பெறுவோம் என்றார்.