குருந்தூர் மலைப்பகுதி தமிழர்களிற்கு சொந்தமானது தமிழர்கள் வழிபாடுகளை அங்கு மேற்கொண்டுள்ளர்- தொல்லியல் திணைக்களம் அதனை பௌத்த மயமாக்குவதற்கு முயல்கின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்
நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்த அவர், எங்கள் தாயகத்தில் மிகமோசமான ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன தமிழ் மக்கள் மிகவும் கொதித்துப்போயிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களின் நிம்மதி கெட்டுப்போயிருக்கின்றது இந்த நிலையிலே அந்த பிரச்சினைகளுக்கு அவசரமாக தீர்வு காணப்படவேண்டும்.
மண்டதீவு பகுதியிலேயே கடற்படைக்காக 18 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றிருக்கின்றன அவற்றை நாங்கள் எதிர்த்து தடுத்திருக்கின்றோம். தொடர்ந்து இந்த வாரம் நில அளவீடுகளிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 18 ஆம் திகதி நாங்கள் முல்லைத்தீவு மாவட்டம குருந்தூர் மலைப்பகுதிக்கு சென்றிருந்தோம் அந்த பகுதி மக்கள் விவசாயிகளின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.
அங்கு சென்றபோது மலையடிவாரத்திலிருந்து மேல்பகுதிக்கு செல்கின்ற பகுதி எங்கும் காடுகள் அழிக்கப்பட்டிருந்தன. அந்த பகுதி துப்புரவு செய்யப்பட்டு செப்பனிடப்பட்டிருக்கொண்டிருந்தது,
அங்கு இராணுவத்தினரின் 51 ஆவது டிவிசன் மற்றும் 591வது பிரிகேட்டின் கொடிகள் பறக்கவிடப்பட்டுக் கொண்டிருந்தனமலைப்பகுதி நூல்களால் அடையாளம் இடம்பட்டு இலக்கங்கள் காணப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.