18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, அமைச்சரவை பேச்சாளர், கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது தொடர்பான பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமேயாகும்.
நாட்டின் அரசியல் பின்னணி, நிர்வாகம் மற்றும் அத்தகைய நடவடிக்கையின் அவசியம் ஆகியவற்றை மதிப்பீடு செய்த பின்னரே இது குறித்து பரிசீலிக்கப்படும்.
வளர்ந்த மற்றும் ஜனநாயக நாடுகளும் இத்தகைய கட்டாய இராணுவப் பயிற்சியை வழங்குகின்றன.
எனவே, இந்த விடயத்தில், இராணுவ மயமாக்கல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.