அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் மற்றும், துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோருக்கு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் அவர் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், வலுவான இருதரப்பு உறவுகளை நோக்கி, இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், சிறிலங்கா ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு கீச்சகத்தில் வாழ்த்துப் பதிவுகளை இட்டுள்ளார்