அமெரிக்காவில் மீண்டும் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது என்று புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தனது பதவி ஏற்பு உரையில் இவ்வாறு தெரிவித்த அவர், இது அமெரிக்காவின் நாள். இது ஜனநாயகத்தின் நாள். வரலாற்றினதும் நம்பிக்கையினதும் நாள்.
அமெரிக்கா சவாலில் அது வெற்றிபெற்றுள்ளது,
நாங்கள் ஒரு வேட்பாளரின் வெற்றியை கொண்டாடவில்லை. ஒரு நோக்கம் இலக்கு வெற்றி பெற்றதை கொண்டாடுகின்றோம், ஜனநாயகம் என்ற நோக்கம் வெற்றிபெற்றதை கொண்டாடுகின்றோம்.
ஜனநாயகம் என்பது விலைமதிப்பற்றது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம், ஜனநாயகம் என்பது பலவீனமானது என்பதை உணர்ந்துள்ளோம். இந்த தருணத்தில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது.
இந்த புனிதமான பகுதியில் – சிலநாட்களிற்கு முன்னர் வன்முறைகள் நாடாளுமன்றத்தின் அடிப்படையையே ஆட்டக்காண செய்யும் வகையில் நடைபெற்றிருந்தன.
இந்த புனிதமான பகுதியில் நாங்கள் ஒரு தேசமாக ஆண்டவனின் கீழ் பிளவுபடாமல் கடந்த இரண்டு நூற்றாண்டுகளை போல அமைதியான முறையில் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.
இந்த நாளில் எனது முழு ஆன்மாவும் அமெரிக்காவை ஐக்கியப்படுத்துவது. எங்கள் மக்களை ஐக்கியப்படுத்துவது தேசத்தை ஐக்கியப்படுத்துவது. குறித்தே சிந்திக்கின்றது.
தேசம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரும் சவால்களை வெற்றி காண்பதற்கு அமெரிக்க மக்கள் ஒன்றுபடவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.